DHURANDHAR MOVIE REVIEW

 படம் பற்றிய அரசியலை தவிர்த்து  இந்த படத்தை பார்க்க வேண்டும்  ஆரம்பத்திலேயே ஒரு எச்சரிக்கை  கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மற்றபடி இந்த படம் மிக அருமையான ரசிக தகுந்த விதத்தில் பாமர ஜனங்களை மட்டுமே குறி வைத்து எடுக்கப்பட்ட படம் என்று  மிகையாகாது.இந்திய சினிமாக்கலில் எந்த ஒரு பொது பிரச்சனையிலும் ஜாதி மற்றும் மதத்தை இழுக்காமல் பண்ணுவது ரொம்ப கஷ்டம் என்பது வேடிக்கை. ஹாலிவுட்  இவளவு அபத்தமாக ஒரு வகுப்பினருக்கு எதிராக  வகுப்பை தூண்டி விடுவது இல்லை. இந்த படம் ஒரு சாதாரண ரௌடியைகளின் தாதாக்களின் கதையாக இருந்திருந்தால் மிகப்பெரிய வெற்றியை  அடைந்திருக்கும். என்னமோ, இந்த பாகிஸ்தான் பற்றிய கதை அலுப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட் மேட்ச் வைதானாலே இந்த காலத்து யாரும் பார்க்கப்போவதில்லை ஏனென்ன்றால் விரோதம் விளையாட்டில் கிடையாது. ஆனால் சினிமா நன்றாக மத வேறுபாட்டை தூண்டி எடுக்கும் படலமாக இருக்கிறது. இது போன்ற சினிமாக்கள் சினிமாவுக்கும் நல்லது இல்லை, சமுதாயத்திற்கும் நல்லது இல்லை. உடனே படத்தின் கிராஃப்ட் பத்தி பேசுங்கள் என்று சொல்வது எனக்கு புரிகிறது. ஆனால் எவ்வளவு நல்ல திரைகதை, இசை, ஒலி அமைப்பு இருந்தாலும் சமூக மாற்றத்திற்காக அர்பணிக்கப்படாத ஒரு இதுபோல் சினிமாவை விமர்சிக்கவே முடியாது. வேண்டும் என்றால் தீவிரவாதிகள் இந்த படத்தை பார்த்து தீவிரவாதத்தை மேலும் கையில் எடுக்க உதவும். அவர்களை பல பல இடங்களில் மகிமைப்படுத்துகிறது இந்த திரைப்படம் cinematic லிபெர்ட்டி என்ற பெயரில். 

Comments